Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று இறுதி வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று இறுதி வாய்ப்பு

By: Monisha Tue, 15 Dec 2020 3:53:48 PM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று இறுதி வாய்ப்பு

தலைமை தேர்தல் ஆணையம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த மாதம் 21, 22 மற்றும் இந்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகத்தில் புதிதாக 4 லட்சத்து 81 ஆயிரத்து 698 பேர்புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். பெயரை நீக்க 1 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேரும், திருத்தம் செய்ய 73 ஆயிரத்து 292 பேரும் விண்ணப்பம் செய்து இருந்தனர்.

election,voter list,name,addition,deletion ,தேர்தல்,வாக்காளர் பட்டியல்,பெயர்,சேர்த்தல்,நீக்குதல்

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க நேரடியாக கொடுக்கப்பட்ட வாய்ப்பு முடிந்துவிட்டது. ஆன்லைன் வழியாக சேர்ப்பதற்கு இன்று இறுதி வாய்ப்பாகும். பெயர்களை சேர்ப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரி 20-ம் ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 39.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் சிறப்பு முகாம்கள் மூலம் 1.25 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். பெயர்கள் நீக்கம் செய்ய 4 ஆயிரத்து 800 பேரும், திருத்தம் செய்ய 13 ஆயிரம் பேரும், முகவரி மாற்றம் செய்ய 19 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.62 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியானவற்றை சேர்க்கவும், நீக்கவும் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags :
|