Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • TET தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் ...இன்றே கடைசி நாள்

TET தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் ...இன்றே கடைசி நாள்

By: vaithegi Sat, 16 July 2022 6:26:05 PM

TET தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் ...இன்றே கடைசி நாள்

தமிழகம்: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று வெளியிட்டது. இதனையடுத்து, மார்ச் 14 ஆம் தேதி முதல் TET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், TET தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்விற்கான முதன்மை தேர்வு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்விற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூலை 11 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஜூலை 16 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

teacher eligibility test,applications ,ஆசிரியர் தகுதி தேர்வு ,விண்ணப்பங்கள்

இதனால், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நினைக்கும் விண்ணப்பதாரர் trb.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விவரங்களை திருத்தம் செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களது ஐடி மற்றும் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது எப்படி விண்ணப்பங்களை திருத்தம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் TN TRBன் அதிகாரபூர்வமான இணையதள முகவரியான trb.tn.nic.in க்கு சென்று Tamil Nadu Teachers Eligibility Test 2022 என்கிற இணைப்பிற்குள் செல்ல வேண்டும்.
பின்பு, ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைக் கிளிக் செய்து உங்களது சான்றுகளை பதிவிட வேண்டும். பின்பு, தேவையான திருத்தங்களை செய்து அவற்றை save செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :