Advertisement

JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

By: vaithegi Thu, 30 June 2022 8:27:48 PM

JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று  கடைசி நாள்


இந்தியா: தேசிய தேர்வு முகமை (NTA) JEE Mains 2022 தேர்விற்கான விண்ணப்ப படிவம் ஏற்கனவே JEEன் அதிகாரப்பூர்வமான வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. JEE தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி என்பதால் இன்று மாலை 9 மணிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும்என்று பார்க்கலாம். இரண்டாம் கட்ட (JEE Main 2022 Session 2) தேர்விற்கு விண்ணப்பிக்க பழைய பதிவு எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 kb முதல் 200 kb வரையிலான கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் புகைப்படத்தை பதிவிட வேண்டும். அதாவது, இந்த புகைப்படத்தை JPG அல்லது JPEG வடிவத்திற்கு மாற்றி பதிவிட வேண்டும். இது மட்டுமல்லாமல் JPG அல்லது JPEG வடிவத்தில் கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் 4 kb முதல் 30 kb வரை அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

jee main exam,apply ,JEE மெயின் தேர்வு,விண்ணப்பிக்கலாம்

மேலும், category certificate ஸ்கேன் செய்யப்பட்ட pdf நகல் 50kb முதல் 300kb அளவில் இருக்க வேண்டும் மற்றும் PwD சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட pdf நகல் 0 kb முதல் 300 kb அளவில் இருக்க வேண்டும்.

தற்போது எப்படி JEE Main 2022 Session 2 தேர்விற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், jeemain.nta.nic.in என்கிற JEE தேர்வின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று Session 2 (two) Registration for JEE(MAIN) 2022 என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், Application No, Password , Security Pin as shown below ஆகிய அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு Sigh IN என்கிற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்து விண்ணப்ப கட்டணத்தையும் கட்ட வேண்டும். SC/ST பிரிவினரை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.350 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :