Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கல்லூரி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

By: vaithegi Tue, 06 Dec 2022 11:22:14 AM

கல்லூரி  மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தஞ்சை : விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் .... தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. முதல்தலைமுறை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களை பட்டதாரிகளாக மாற்றுவதற்கும் அரசு பல முயற்சிகளையும் செய்து வருகிறது.

இதனை அடுத்து இந்த நிலையில், சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை 3 ஆண்டு படிப்புகளில் பயிலும் சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் பெறப்படுகிறது.

scholarships,students ,உதவித்தொகை,மாணவர்கள்

இதையடுத்து 1-ம் ஆண்டு மாணவர்களுக்கு 20.01.2023-க்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும், 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களின் புதுப்பிக்கும் விண்ணப்பங்களை இன்றைக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களின் பெற்றோர்கள் ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், https://www.bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm//scholarship schemes இணையதளத்தில் இருந்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :