Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

By: vaithegi Wed, 06 July 2022 5:27:05 PM

தமிழக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தமிழகம்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை ஒன்றை வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

temporary teacher,appointment , தற்காலிக ஆசிரியர்,நியமனம்

பின் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். மேலும் இடைநிலை ஆசிரியா் பணிக்கு ‘டெட்’ முதல்தாள் தோ்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு ‘டெட்’ 2-ஆம் தாள் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியா் பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன் பி.எட் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags :