Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே இறுதி நாள்

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே இறுதி நாள்

By: vaithegi Mon, 31 July 2023 10:31:32 AM

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே இறுதி நாள்

இந்தியா: இன்றுடன் கால அவகாசம் நிறைவு .. 2022-23 -ஆம் ஆண்டு நிதியாண்டு வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்றுடன் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியிருந்தது.

இதையடுத்து கடந்த நிதியாண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக மத்திய அரசு நினைவூட்டல்களை ஏற்படுத்தி வந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

income tax account,central govt , வருமான வரி கணக்கு, மத்திய அரசு

வருமான வரி கணக்கை தாக்கல் செய்து உள்ளவர்கள் நேற்று மாலை வரை சுமார் 6 கோடி பேர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மட்டும் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து உள்ளனர். இந்நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Tags :