Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10, 12-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே இறுதி நாள்

10, 12-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே இறுதி நாள்

By: vaithegi Mon, 12 June 2023 10:42:09 AM

10, 12-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே இறுதி நாள்

சென்னை : தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ல் நிறைவுபெற்ற +2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர்.

இதை தொடர்ந்து, மாணவர்கள் அடுத்து தங்கள் கல்லூரி படிப்பில் செல்ல எதுவாக, மாணவர்கள் பயின்ற பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே 12-ம் தேதி வழங்கப்பட்டது. தற்போது, 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது

in provisional marks certificate,school education department ,தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், பள்ளி கல்வித்துறை

பெயர், பிறந்த தேதி, புகைப்படம் திருத்தம் செய்ய இன்று தான் கடைசி நாள் ஆகும். இதனை தவறவிட்டால் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில், அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பள்ளி மாணவ மாணவியர் விவரங்களை அளிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.


Tags :