Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுக்கோட்டையில் இன்று (செப்.08) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டையில் இன்று (செப்.08) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 08 Sept 2022 10:38:31 AM

புதுக்கோட்டையில்  இன்று (செப்.08) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் மூக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளி அம்மன் கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்று வீரமாகாளி அம்மன் கோயிலில் குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

எனவே அதனால் இதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையடுத்து இந்த குடமுழுக்கு விழாவில் உள்ளூரில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

pudukottai,local holiday ,புதுக்கோட்டை,உள்ளூர் விடுமுறை

இதை அடுத்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இன்று (செப்.08) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடுமுறையானது மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் மற்றொரு தினம் அன்று மாவட்டத்தில் வேலை நாளாக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Tags :