Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று (செப். 12) 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

இன்று (செப். 12) 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

By: vaithegi Mon, 12 Sept 2022 3:02:53 PM

இன்று (செப். 12) 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு


சென்னை: 5 மாவட்டங்களில் இன்று கனமழை...ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவி வருகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழப்பதால் வங்கக் கடலில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அதனால் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, தமிழக தென் கடலோர பகுதிகள் மற்றும் இலங்கை ஒட்டிய பகுதிகளிலும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

heavy rain,meteorological department ,கனமழை, வானிலை ஆய்வு மையம்

மேலும் அது மட்டுமில்லாமல் கேரள, கர்நாடக அரபிக்கடல் பகுதிகளிலும் மணிக்கு, 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செப் 14 ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :