Advertisement

கிரிவலத்தை ஒட்டி, இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Tue, 01 Aug 2023 10:23:33 AM

கிரிவலத்தை ஒட்டி, இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி, இன்று பேருந்துகள் இயக்கம் ... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்(வி) லிமிடெட், வேலூர் மண்டலம், பொது மேலாளர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கிரிவலம் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (வி) லிமிடெட், வேலூர் மண்டலம், சார்பில் சென்னையிலிருந்து 30 சிறப்பு பேருந்துகள்,

special buses,krivalam , சிறப்பு பேருந்துகள் ,கிரிவலம்

மேலும் வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள், திருப்பத்தூரில் இருந்து 30 சிறப்பு பேருந்துகள் மற்றும் ஆற்காட்டிலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.என்று அதில் குறிப்பிட்டு உள்ளது.

Tags :