Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது

இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது

By: vaithegi Tue, 01 Nov 2022 2:42:27 PM

இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது

சென்னை: இன்றைய நிலவரப்படி வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. ஆனால் வீட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பின் படி ரூ. 116 குறைக்கப்பட்டு ரூ.1893க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்தது. தற்போது நிலைமை சரியான நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கி இருக்கிறது.

gas cylinder,price ,கேஸ் சிலிண்டர்,விலை

அதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் எரிவாயு விலை 6 மாதங்களில் 6 முறை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 7வது மாதமும் 7வது முறை விலை குறைந்துள்ளது.

எனவே அதன் படி வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1893க்கும், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இன்றி, ரூ. 1068க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :