Advertisement

இன்று சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைந்ததுள்ளது

By: vaithegi Fri, 28 July 2023 09:57:27 AM

இன்று சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைந்ததுள்ளது

சென்னை: சின்ன வெங்காயத்தின் விலை சற்று குறைவு மற்றும் தக்காளியின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை ... வட மாநிலங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது.

மேலும் அத்துடன் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் , அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனை அடுத்து கடந்த 3 நாட்களாகவே சென்னையில் தக்காளியின் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் 110 ரூபாய்க்கு விற்பனையானது.

onion,tomato , சின்ன வெங்காயம்,தக்காளி


கோயம்பேடு சந்தையில் 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலையில் மாற்றமின்றி கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூபாய் 30 குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags :
|