Advertisement

இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது

By: vaithegi Wed, 02 Aug 2023 09:42:08 AM

இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது


சென்னை : தக்காளி விலை குறைந்தது ... வடமாநிலங்களில் கனமழையின் காரணமாக தக்காளியின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு அதன் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. இதையடுத்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1100 தக்காளி தேவைப்படும் நிலையில் , தற்போது 300 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதால் தக்காளி வரத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதன் விலை கணிசமாக அதிகரித்து உ ள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ரூபாய் 200 எட்டியது.எனவே தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் நியாய விலை கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 60 விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

tomato price,koyambedu market,chennai ,தக்காளி விலை ,சென்னை கோயம்பேடு சந்தை

மேலும் அத்துடன் கூடுதலாக 200 கடை நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை நேற்று முதல் தொடங்கிய நிலையில், தமிழக முழுவதும் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து உள்ளது. நேற்று ரூ.170-க்கு விற்பனையான 1 கிலோ தக்காளி, இன்று ரூ.160-க்கு விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக சில்லறை விற்பனையில் ரூ.180 க்கு விற்பனையாகி வருகிறது.

Tags :