Advertisement

இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை

By: vaithegi Tue, 01 Aug 2023 10:45:37 AM

இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தக்காளியின் விலை

சென்னை: வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் வரத்து குறைந்து உள்ளது. எனவே இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளியின் விலை 150 ரூபாயை எட்டிய நிலையில் சில்லறை விற்பனையில் 180 ரூபாயாக இருந்தது. நேற்று தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ தக்காளி விலை 180 ஆக அதிகரித்து உள்ளது.

price and sale of tomatoes ,தக்காளியின் விலை  ,விற்பனை

இதன் காரணமாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை 200 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ.40 குறைந்து, ரூ.140 விற்பனையாகி வருகிறது.

வரத்து குறைவால் நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில் இன்று தக்காளி விலை குறைந்துள்ளது சாமானியர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படடுத்தி உள்ளது.

Tags :