Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்

இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்

By: vaithegi Sat, 24 June 2023 09:45:20 AM

இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது ... மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர் பெயரில் திறக்கப்பட்டன.

இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கத்திவாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, புத்தாகரம் கல்கி மான்போர்டு பள்ளி ,புது வண்ணாரப்பேட்டை சென்னை மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் சி எஸ் ஐ நார்த்விக் அரசு மேல்நிலைப்பள்ளி ,அத்திப்பட்டு வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி ,வில்லிவாக்கம் சிவன் கோயில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி ,புலியூர் சென்னை நடுநிலைப்பள்ளி,

mega specialty medical camp,tamil nadu ,மெகா சிறப்பு மருத்துவ முகாம் ,தமிழ்நாடு


மதுரவாயில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ,ஆலந்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள நிதி பள்ளி, பெருங்குடி பாலாஜி நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய 10 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மேகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

மேலும் அத்துடன் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் பதிவு செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :