Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

By: vaithegi Wed, 27 Sept 2023 4:48:02 PM

இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

சென்னை: தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதாவது, இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருவதால் தஞ்சாவூர், கோவை, கடலூர், நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 3 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்து உள்ளது.

rain,thunder,lightning ,மழை ,இடி, மின்னல்

இதையடுத்து தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக பாளையங்கோட்டையில் 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்க்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|