Advertisement

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Mon, 12 Sept 2022 11:07:12 AM

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. எனவே அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து இது நேற்றைய பாதிப்பான 5 ஆயிரத்து 76-ஐ விட அதிகமாகும். எனவே இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 580 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 4 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்து 239 பேர் குணமடைந்துள்ளனர்.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 176 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை மட்டும் 5 லட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அதேவேளை நாடு முழுவதும் இதுவரை மட்டும் 215 கோடியே 26 லட்சத்து 13 ஆயிரத்து 49 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|