Advertisement

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

By: vaithegi Fri, 30 Sept 2022 11:09:08 AM

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

இந்தியா: இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு ... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. இதனையடுத்து அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இது நேற்றைய பாதிப்பான 4 ஆயிரத்து 272-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 87 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 4 கோடியே 40 லட்சத்து 19 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 629 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை மட்டும் 218கோடியே 52 லட்சத்து 16 ஆயிரத்து 710 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|