Advertisement

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

By: vaithegi Sat, 28 Jan 2023 8:47:08 PM

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

சென்னை: சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன் முதலில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.தற்போது கொரோனா வைரசானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்த வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,infection,tamil nadu ,கொரோனா ,தொற்று ,தமிழ்நாடு

இதையடுத்து தமிழ்நாட்டில் 3 ஆண்கள் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 34 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|