Advertisement

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

By: vaithegi Wed, 27 July 2022 11:09:11 AM

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்தவகையில் , இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது நேற்று முன்தின பாதிப்பான 16 ஆயிரத்து 866 மற்றும் நேற்றைய பாதிப்பான 14 ஆயிரத்து 830-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 202 கோடியே 79 லட்சத்து 61 ஆயிரத்து 722 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|