Advertisement

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

By: vaithegi Fri, 29 July 2022 4:09:00 PM

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அவகையில் , இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 20 ஆயிரத்து 557-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 79 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.

corona virus,india ,கொரோனா ,இந்தியா

இதை அடுத்து இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 9 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 203 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரத்து 307 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :