Advertisement

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Tue, 20 Sept 2022 4:33:22 PM

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்தது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37 ஆயிரத்து 056-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.8 குறைந்து 4ஆயிரத்து 632-க்கு விற்பனை ஆனது. அதைபோல வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி. 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.62,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 37,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து 4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.62.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.62,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :