சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
By: vaithegi Thu, 28 July 2022 08:06:07 AM
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.
அதன்படி , கடந்த 67 நாட்களாகவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து 68-வது நாளாக ஜூலை-28 இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை.
இதனால், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags :
petrol |