Advertisement

இன்றைய வானிலை நிலவரம்

By: vaithegi Sat, 23 Sept 2023 3:37:42 PM

இன்றைய வானிலை நிலவரம்


சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஊட்டியில் 6 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

மேலும் ஈரோட்டில் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

tamil nadu,puducherry,karaikal,vanilai ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் ,வானிலை


கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :