Advertisement

பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

By: Monisha Sat, 26 Dec 2020 2:12:55 PM

பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் துவக்கம்

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை இந்த டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுக்கான டோக்கனை டிசம்பர் 31-ம் தேதி வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிக்க உள்ளனர்.

pongal gift,token,distribution,money,ration card ,பொங்கல் பரிசு,டோக்கன்,விநியோகம்,பணம்,ரேஷன் அட்டை

பொங்கல் தொகுப்பில் 2.10 கோடி ரேஷன் அட்டைக்காரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்கப்படும். ஒரு முழுக்கரும்பு, நல்ல துணிப்பையுடன் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காயும் தரப்படும்.

மேலும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னையில் இந்த பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|