Advertisement

மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய டோக்கன்

By: Nagaraj Sat, 18 June 2022 8:14:42 PM

மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய டோக்கன்

சென்னை: அடுத்து வரும் 6 மாதங்களுக்கு பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்ய சுமார் 40 மையங்களில் டோக்கன்கள் வழங்கப்படுமென மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே இவர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய சுமார் 40 மையங்களில் வழங்கப்படுமென மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

no charge,bus,card,government of tamil nadu,user,notification ,கட்டணமில்லை, பேருந்து, அட்டை, தமிழக அரசு, பயனாளர், அறிவிப்பு

இந்த டோக்கன்கள் வினியோகமானது வருகிற 21- ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 31-ந்தேதி வரையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் குறிப்பிட்ட மையங்களில் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த டோக்கன்கள் பெறுவதற்கு மூத்த குடிமக்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ் மற்றும் இரண்டு 2 வண்ண பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை சமர்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே பயன்படுத்திய முந்தைய இலவச பயனாளர் அட்டையையும் மூத்த குடிமக்கள் கொண்டுவரும் பட்சத்தில் இவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|
|
|