Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படும் ...... தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படும் ...... தேவஸ்தானம் அறிவிப்பு

By: vaithegi Tue, 14 June 2022 3:08:44 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்படும் ...... தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திர: ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுவாமி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இலவச நேரடி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

அத்துடன் ரூ.300 சிறப்பு கட்டணம் செலுத்தி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இதையடுத்து தற்போது அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு நேரடி முறையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து டோக்கன்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது..
அதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் , திருப்பதியில் அங்கப்பிரதட்சணம் டோக்கன்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இனிமேல் பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டு காத்திருக்க வேண்டியதில்லை .

அதன்படி இந்த டோக்கன்கள் (ஜூன் 15) நாளை காலை 10 மணிக்கு மற்றும் ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை என நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கப்பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags :
|