Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்

By: vaithegi Tue, 03 Jan 2023 10:21:02 AM

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். எனவே அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் 1000 ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

இதையடுத்து இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி அன்று தொடங்கிவைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் 1000 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

pongal gift,distribution ,பொங்கல் பரிசு ,வினியோகம்

இந்த பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வழங்க அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இதனை அடுத்து டோக்கன்கள் இன்று முதல் 8-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. (6-ந் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அன்று டோக்கன் வழங்கப்படாது). ஒரு நாளுக்கு 200 டோக்கன்களை அலுவலர்கள் வீடு வீடாக வந்து வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :