Advertisement

தமிழகத்தில் 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு

By: vaithegi Fri, 01 July 2022 4:10:24 PM

தமிழகத்தில் 4 இடங்களில் சுங்க கட்டணம் உயர்வு

தமிழகம்: இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 400க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளி வட்டச் சாலையில் இயங்கி வரும் 4 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்னமுல்லைவாயல் ஆகிய 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 3 சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை என தினசரி கட்டணத்தில் சராசரியாக ரூ. 5 லிருந்து ரூ.22 வரை உயர்த்தியுள்ளது.

அதேபோல் மாதாந்திர கட்டணத்தில் ரூ. 194 லிருந்து ரூ. 1,250 வரை உயர்த்தியுள்ளது. இக்கட்டண உயர்வானது வரும் ஜூலை 5 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், 31.03.2023 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

customs fees,heavy vehicles ,சுங்க கட்டணம் ,கனரக வாகனங்கள்

வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் 60 கிமீ நீளமான, வரதராஜபுரம், கொலப்பஞ்செரி, நெம்மேலிச்சேரி மற்றும் சின்னமுல்லைவாயல் ஆகிய இடங்களுக்கு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் சுங்க கட்டணம் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதில், கட்டணம் 5% – 10% உயர்த்தவோ அல்லது சிலவற்றுக்கு மட்டும் குறைக்கப்படவோ வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

Tags :