Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு

20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு

By: vaithegi Wed, 30 Aug 2023 2:27:41 PM

20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் அதிகரிப்பு

சென்னை: தமிழக முழுவதும் 54 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு 2 பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்க சாவடிகளுக்கு கட்டணம் , செப்டம்பர் மாதம் மீதம் உள்ள சுங்க சாவடிகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது.

எனவே அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள 20 சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது . திண்டுக்கல், திருச்சி ,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.

customs fee,toll booth ,சுங்க கட்டணம்,சுங்கச்சாவடி

கார் ,வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் 1 முறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து கட்டணம் ஆனது 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2 முறை சென்றுவர 125 ரூபாயிலிருந்து 135 ரூபாயாக அதிகரித்து உள்ளது. மாதாந்திர கட்டணம் ரூபாய் 2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் , 2 முறை சென்றுவர 220 ரூபாயிலிருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. மாதாந்திர கட்டணம் 4385 ரூபாயிலிருந்து 4800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 290 லிருந்து 320 ரூபாயாகவும் , 2 முறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 2770 இல் இருந்து 9,595 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags :