Advertisement

சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.10 குறைந்தது

By: vaithegi Tue, 08 Aug 2023 09:38:50 AM

சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.10 குறைந்தது

சென்னை : தமிழகத்தில் மாறுபட்ட கால நிலையால் தக்காளி உற்பத்தி குறைந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், இம்முறை ஆந்திரா, கர்நாடகாவிலும் கனமழையால் தக்காளி விளைச்சல் குறைந்தது.

அதனால், தக்காளி விலை தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு கிலோ ரூ.200-க்கு விற்றது. இந்த நிலையில் கடந்த 1 வாரமாக தக்காளி வரத்து கொஞ்சம், கொஞ்சமாக உயர தொடங்கினாலும் தமிழக தக்காளியை கர்நாடகா, ஆந்திரா வியாபாரிகளும் கொள்முதல் செய்ததால் விலை குறையவில்லை.

tomato price,chennai,sale ,தக்காளி விலை ,சென்னை, விற்பனை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 10 ரூபாய் குறைந்தது. நேற்று 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 90 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாக கொண்டு வருகிறது. தக்காளி வரத்து 600 டன்னாக உயர்ந்து உள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 தினங்களாக ரூபாய் 100க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தக்காளி விலை குறைந்து வரும் நிலையில் சில்லறை விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வரும் காலங்களில் தக்காளியின் வரத்து அதிகரிக்க அதிகரிக்க அதன் விலை குறையும் என்று கூறப்படுகிறது

Tags :