Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தக்காளி விலையானது இன்று ரூ.30 குறைந்துள்ளது

தமிழகத்தில் தக்காளி விலையானது இன்று ரூ.30 குறைந்துள்ளது

By: vaithegi Wed, 19 July 2023 12:50:49 PM

தமிழகத்தில் தக்காளி விலையானது இன்று ரூ.30 குறைந்துள்ளது

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரமாகவே காய்கறி விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்ள்ளது. தக்காளி விலையை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனாலும் தக்காளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்காக 60 முதல் 65 லாரிகளில் கொண்டு வரப்படும்.

tomato price,koyambedu market,chennai ,தக்காளி விலை,சென்னை கோயம்பேடு மார்கெட்

ஆனால் கடந்த சில வாரமாக 30 முதல் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வருகிறது. அதுவே விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்நிலையில் இன்று கோயம்பேட்டில் தக்காளி விலை அதிரடியாக ரூ.30 குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல நாட்களுக்கு பின் தக்காளி விலை குறைந்து இருப்பதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Tags :