Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 110 க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 110 க்கு விற்பனை

By: vaithegi Sun, 16 July 2023 09:47:00 AM

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 110 க்கு விற்பனை

சென்னை : தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை உச்சத்திலிருந்து வருகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தை பொறுத்தவரை கிலோ ரூ.150 வரைஉ உச்சம் தொட்டு தற்போதும் 100 ரூபாயை கடந்தே விற்பனையாகி கொண்டு வருகிறது.

எனினும் நியாய விலைக்கடைகள் மற்றும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை இன்னும் குறைந்தபாடில்லை.

sale,tomato ,விற்பனை,தக்காளி

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மாற்றமின்றி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 150க்கு விற்கப்படுகிறது.

இதேபோன்று கோயம்பேடு காய்கறி சந்தையில், வெங்காயம் கிலோவுக்கு - ரூ.20, சின்ன வெங்காயம் - ரூ.180, நவீன் தக்காளி - ரூ.110, உருளை- ரூ.30, பீன்ஸ் - ரூ.90, ஊட்டி கேரட் - ரூ.65-க்கு விற்கப்படுகிறது. பெங்களூர் கேரட்- ரூ.40, இஞ்சி - ரூ.230, பூண்டு - ரூ.210, வண்ண குடைமிளகாய் - ரூ.200, பட்டாணி - ரூ.190, பச்சை குடைமிளகாய் - ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|