Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மாற்றமின்றி விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மாற்றமின்றி விற்பனை

By: vaithegi Sun, 06 Aug 2023 10:07:20 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மாற்றமின்றி விற்பனை

சென்னை: வடமாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளியின் விளைச்சலில் பெரும் பாதிப்பை ஏற்பட்டது. இதனால் தக்காளியின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது. தமிழகத்தில் அரசின் சார்பாக நியாய விலை கடை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை 200 ரூபாயை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்குவுள்ளாகினர்.

tomato price,sale,koyambedu market , தக்காளி விலை,விற்பனை,கோயம்பேடு மார்க்கெட்

இதையடுத்து நேற்று முன் தினம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்றும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி கொண்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ நாட்டு தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று 1 கிலோ நவீன் தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|