Advertisement

தக்காளியின் விலை தொடர் சரிவு

By: vaithegi Sun, 13 Aug 2023 3:44:26 PM

தக்காளியின் விலை தொடர் சரிவு

சென்னை: தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.40க்கு விற்பனை ..காலநிலை மாற்றத்தினால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

tomato price,koyambedu market,chennai ,தக்காளியின் விலை ,சென்னை கோயம்பேடு சந்தை


இதன் பின், விலையேற்றத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 60க்கு விற்பனை செய்யப்பட்ட வந்தது. தினமும் தக்காளியின் விலை ரூ. 10 அளவுக்கு குறைந்து தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ. 40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு உ வருகிறது.

மேலும், நல்ல தரமாய்ந்த தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 20 வரையிலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Tags :