Advertisement

தொடர்ந்து குறையும் தக்காளியின் விலை

By: vaithegi Mon, 21 Aug 2023 10:01:13 AM

தொடர்ந்து குறையும் தக்காளியின் விலை

சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.10 குறைந்தது ... வட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட அதன் விலை கடந்து சில தினங்களாகவே அதிகரித்து வந்தது.

இதையடுத்து தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் நியாய விலை கடை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விலை கிலோ ₹ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இச்சூழலில் தற்போது தக்காளியின் விலை குறைய தொடங்கி உள்ளது.

tomato price,koyambedu market,chennai ,தக்காளியின் விலை,சென்னை கோயம்பேடு சந்தை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று, தக்காளி விலை கிலோவுக்கு மேலும் ரூ. 10 குறைந்து ரூ.30க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.

கடந்த 17 ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளி கிலோவுக்கு ₹5 குறைந்து, ₹35க்கு விற்பனையான நிலையில் இன்று மேலும் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :