Advertisement

தக்காளி விலை இன்று மேலும் குறைந்தது

By: vaithegi Thu, 17 Aug 2023 09:54:48 AM

தக்காளி விலை இன்று மேலும் குறைந்தது

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், இன்று தக்காளி கிலோவுக்கு ₹5 குறைந்து ...வட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட அதன் விலை கடந்து சில தினங்களாகவே அதிகரித்து வந்தது.

இதையடுத்து தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் நியாய விலை கடை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விலை கிலோ ₹ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.இச்சூழலில் தற்போது தக்காளியின் விலை குறைய தொடங்கி உள்ளது.

tomato price,sale,fair price shop,farm green shop ,தக்காளி விலை,விற்பனை, நியாய விலை கடை ,பண்ணை பசுமை கடை

நேற்று தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்துநேற்று முன்தினம் கோயம்பேடு சந்தையில் கிலோ தக்காளி விலை ₹50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று 10 ரூபாய் குறைந்தது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், இன்று தக்காளி கிலோவுக்கு மேலும் ₹5 குறைந்து, ₹35க்கு விற்பனையாகிறது. விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|