Advertisement

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்தது

By: vaithegi Fri, 11 Aug 2023 09:50:17 AM

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்தது

சென்னை: படிப்படியாக குறைந்தது தக்காளி விலை ... வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தக்காளியின் விலை அதிகரித்தது.

எனவே இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து கடந்த சில வாரங்களாகவே குறைந்து இருந்தது.

இதன் காரணமாக தக்காளி விலை உச்சத்தை தொட்டிருந்தது. ஆனால் கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் மழை குறைந்து உள்ளதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

tomato price,koyambedu market ,தக்காளி விலை,கோயம்பேடு சந்தை

தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 குறைந்தது. இதனை அடுத்து நேற்று 1 கிலோ தக்காளி ரூ. 70க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :