Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை குறைந்தது

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை குறைந்தது

By: vaithegi Mon, 03 July 2023 10:28:57 AM

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சலும், வரத்தும் அதிகரிக்கும் போது தக்காளியின் விலை குறைந்து காணப்படும். தக்காளியின் விளைச்சல் , வரத்து குறையும் போது தக்காளி விலை உச்சத்தை பெறுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் என்பது தற்போது குறைந்து உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளி வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ₹40 இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 150 ரூபாயை எட்டியது.

tomato,koyambedu,chennai ,தக்காளி ,சென்னை கோயம்பேடு

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. சில்லறை வணிக கடைகளில் 1 கிலோ தக்காளி 110 முதல் 120 வரை விற்பனை ஆகிறது.

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரத்து குறைந்து உள்ளதால் 1 கிலோ தக்காளி 150 வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|