Advertisement

சென்னையில் இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது

By: vaithegi Tue, 04 July 2023 10:22:48 AM

சென்னையில் இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது

சென்னை : தக்காளி விலை மீண்டும் சதமடித்தது .... தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் 82 நியாய விலைக் கடைகளில் இன்று முதல் ₹60க்கு தக்காளி விற்பனை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை கடையிலிருந்து ரேஷன் கடைகளுக்கு தக்காளி ஏற்றிச் செல்லும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு பத்து ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ஆனது 120 முதல் 130 வரை விற்பனையாகிறது.

tomato price,koyambedu,chennai ,தக்காளி விலை,சென்னை கோயம்பேடு

இதன் மூலம் சென்னையில் தக்காளி விலை இன்று மீண்டும் சதமடித்தது.தக்காளி, நேற்று கிலோ ரூ.95க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 1 கிலோ ரூ.100ஐ எட்டியது .

இதனை அடுத்து பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.110க்கு விற்பனையாகும் நிலையில் சாம்பார் வெங்காயம் நேற்று ரூ.80 வரை விற்ற நிலையில் இன்று கிலோ ரூ 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags :