Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் தக்காளி விலை இரண்டாவது நாளாக கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் தக்காளி விலை இரண்டாவது நாளாக கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை

By: vaithegi Tue, 27 June 2023 10:06:40 AM

சென்னையில் தக்காளி விலை இரண்டாவது நாளாக  கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ... தினசரி சமையலில் மிகவும் தவிர்க்க முடியாத பொருளாக உள்ள தக்காளி, உற்பத்தி மற்றும் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ 100 ரூபாயை தொட்டது. கடந்த சில வாரங்களாகவே வெளுத்து வாங்கிய கோடை வெயில், தொடர்ந்து வீசிய பலத்த காற்று, திடீர் மழை போன்ற காரணங்களால் தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் வரத்து குறைந்ததே விலையேற்றதிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து நடுத்தர வர்த்தகத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

sale,price of tomatoes ,விற்பனை,தக்காளி விலை

இதையடுத்து சென்னையில் பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய், கத்தரிக்காய் ஆகியவற்றின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்த வகையில் இருந்து கொண்டு வருகிறது. தக்காளி மொத்த விலையில் 90 ரூபாயாகவும் சிலரை விலையில் கிலோ 100 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

மேலும் பீன்ஸ் மொத்த விலையில் கிலோ 110 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பெங்களூருவிலும் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பெங்களூரில் கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாயாக விலை அதிகரித்திருக்கிறது.

Tags :
|