Advertisement

தொடர் கனமழையின் காரணமாக தக்காளியின் விலை அதிகரிப்பு

By: vaithegi Wed, 07 Sept 2022 12:55:06 PM

தொடர் கனமழையின் காரணமாக தக்காளியின் விலை அதிகரிப்பு


சென்னை : இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் கேரளாவில் தொடங்க ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை, அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக அப்பகுதி மக்கள் இயல்பு நிலை பெரிதும் பாதித்து சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து கொண்டு வருகின்றனர்.

tomato,continuous heavy rain,price , தக்காளி,தொடர் கனமழை,விலை


மேலும் இது குறித்து தமிழக அரசு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் தக்காளியின் சில்லறை விலை உயர்ந்து காணப்படுகிறது.

இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இதன் காரணமாக சென்னையில் செயல்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சிந்தாமணி நாம்கோ மற்றும் காஞ்சி மக்கள் அங்காடி முதலிய கூட்டுறவு பண்டகசாலைகள் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி ரூ.40 முதல் ரூ.42 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|