Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3-வது நாளாக கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலையில் மாற்றமில்லை

3-வது நாளாக கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலையில் மாற்றமில்லை

By: vaithegi Sun, 23 July 2023 09:57:22 AM

3-வது நாளாக கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலையில் மாற்றமில்லை

சென்னை: 1 கிலோ தக்காளி ரூ. 90க்கு விற்பனை .... விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து கொண்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ தக்காளி ரூ. 150 வரை விற்பனையானதால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களுமே பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்வு பேசுபொருளானது. திருமணம் உள்ளிட்ட விசேஷ வீடுகளில் தக்காளியை விலை உயர்ந்த பரிசாக வழங்கும் அளவிற்கு விமர்சனங்கள் பல எழுந்தன.

tomato price,koyambedu vegetable market ,தக்காளி விலை,கோயம்பேடு காய்கறி சந்தை

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை 40 ரூபாய் வரை குறைந்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாகவே தக்காளி விலையில் மாற்றமின்றி மொத்த விற்பனையில் 1 கிலோ 90 ரூபாய்க்கும்,

சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 100 முதல் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது. இதையடுத்து வரத்து ஏற்ற இறக்கம் இன்றி வருவதால், விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்வதாக வியாபாரிகள் தகவல் கூறுகின்றனர்.

Tags :