Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

By: vaithegi Fri, 30 June 2023 2:37:04 PM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

சென்னை: கடந்த சில தினங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக 2 நாட்களில் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை அதிகரித்து. எனவே இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.

மேலும் அத்துடன் தமிழக அரசால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விலை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் காரணமாக சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மொத்த விலையில் ரூ.50 ஆக குறைந்தது.

tomatoes,koyambedu market,chennai ,தக்காளி , சென்னை கோயம்பேடு மார்க்கெட்


இதனை அடுத்து வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ.80-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் தக்காளி விலை கிடுகிடு அதிரித்துள்ளது. வரத்து குறைவால், ஒரேநாளில் ரூ.60-க்கு விற்ற தக்காளி, 15 ரூபாய் உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைத்தொடர்ந்து புறநகர் பகுதிகளில் தக்காளி சில்லறை விற்பனை ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags :