Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தின் முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தின் முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

By: vaithegi Tue, 06 Sept 2022 9:51:09 PM

கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தின் முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை

பெங்களூரு; கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், மண்டியா ஆகிய 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை-வெள்ளம் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து கர்நாடகாவின் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 130 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

primary schools,vacation,bangalore , முதல்நிலை பள்ளிகள் ,விடுமுறை ,பெங்களூரு

இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

எனவே கர்நாடகாவின் பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக நகரெங்கும் சாலைகளில் நீர் தேங்கி காணப்படும் சூழ்நிலையில், முதல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :