திருவள்ளூரில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
By: vaithegi Thu, 08 Dec 2022 4:11:08 PM
திருவள்ளூர் : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை .... தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய வடகிழக்கு பருவமழை சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியது. தற்போது மழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த புயலை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் எல்லா நேரங்களிலும் தயாராக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதன் தொடர்ச்சியாக சென்னை,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும் டிசம்பர் 10ஆம் தேதியும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.