Advertisement

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

By: vaithegi Tue, 04 July 2023 10:31:25 AM

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகை : சிக்கல் சிங்காரவேலவர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்து உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் 7-வது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்து உள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.

nagai,holiday ,நாகை ,விடுமுறை

இதையடுத்து இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நாளை வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது.

சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. எனவே விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அறுக்கிற ஜூலை 8ம் தேதி வேளை நாளாக இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

Tags :
|