Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 06 Mar 2023 1:48:53 PM

புதுவை மற்றும் காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுவை : தமிழகத்தில் ஆண்டுதோறும் கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் மாசி மக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதனை அடுத்து நடப்பு ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றப்பட்டது.இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்

holiday,new year,karaikal ,விடுமுறை,புதுவை ,காரைக்கால்

கும்பகோணத்தில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகம் மட்டுமல்ல புதுவையிலும் மாசிமக திருவிழா மார்ச் 6 திருக்காஞ்சியிலும், 7-ம் தேதி வைத்திக்குப்பத்திலும் போன்ற தேதிகளில் நடைபெற உள்ளது.

எனவே இதனை முன்னிட்டு மார்ச் 7-ம் தேதி புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறையின்றி செய்முறை பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :