Advertisement

நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 26 Oct 2023 11:54:16 AM

நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

சேலம் : கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ..சேலம் மாவட்டத்தில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் தென்மேற்கு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வடக்கு திசையிலும் வாயில் குறுகலாக இருந்த நிலையில் தற்போது அந்த பகுதி விரிவுப்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் தற்போதையிலிருந்து பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

local holiday,salem ,உள்ளூர் விடுமுறை,சேலம்

இதையடுத்து, பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசிப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், விழா சிறப்பாக நடைபெறும் பொருட்டு அம்மன் கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோவில் பல நூற்றாண்டு கால பழமையானது என்பதனால் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான பூஜைகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி நாளை சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :