Advertisement

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 04 July 2023 1:00:07 PM

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

நாகை : நாகை மாவட்டத்தில் அமைந்து உள்ள செய்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலில் நாளை மறுநாள் குடைமிளக்க விழா நடைபெற உள்ளது. எனவே இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ள விடுமுறை அறிவிப்பு ... நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டு குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த குடமுழுக்கு விழாவில் தொடக்கமாக நேற்று (ஜூலை. 02) கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. அடுத்ததாக வருகிற ஜூலை 5ஆம் தேதி காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர்.

local holiday,nagai ,உள்ளூர் விடுமுறை,நாகை

எனவே இதனை முன்னிட்டு தற்போது கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு ஜூலை 05 ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உள்ளார்.

எனவே இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் ஜூலை 8 ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

Tags :